Header Ads



இறுதிச் சுற்றுக்கு வருவதும் ஒரு விதமான வெற்றிதான்.


இலங்கை கிரிக்கெட் அணி தமது குறைபாடுகளையும் தவறுகளையும் நிவர்த்தி செய்துகொண்டு இவ்வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தயாராக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.


ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தமை உலகக் கிண்ணம் போன்ற மாபெரும் போட்டிக்கு செல்லும் இலங்கை அணிக்கு ஊக்கமளிப்பதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,


'முதலாவதாக, நாம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வகையில் சிறப்பாக விளையாடிய அணி என்பதைச் சொல்ல வேண்டும்.


ஒரு போட்டியின் இறுதிச் சுற்றுக்கு வருவதும் ஒரு விதமான வெற்றிதான்.


எனினும் இறுதிப்போட்டியை விளையாடிய விதத்தில் எம்மால் மகிழ்ச்சி அடைய முடியாது.


இது கிரிக்கெட் வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் பொதுவானது.


கிரிக்கெட் வீரர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை வழங்க வேண்டும்.


உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய போட்டிக்கு செல்லும் போது இந்த தோல்வி அணிக்கு ஊக்கமாக இருக்கும்.


ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசியது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


இறுதிப்போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றத்தை அளிக்கிறது. உலகக் கோப்பை போட்டிக்கு முன் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.


இருப்பினும், அணி தொடர்பில் நேர்மறையாக பார்க்க வேண்டும். ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற நாள் எங்களுக்கு ஒரு மோசமான நாள். இப்படி ஒரு போட்டியை நிறைவு செய்வது வெட்கப்பட வேண்டிய ஒரு நிலை. இதனை நம் எல்லோராலும் தாங்கிக்கொள்வது கடினம். இருப்பினும், ஒரு பெரிய போட்டி எதிர்வரும் நாட்களில் வரப்போகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.


இந்த மாபெரும் தோல்வியில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது.


எமது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம், நாம் ஒரு அணியாக முன்னேற முடியும். அதை செய்ய முடியும் என நான் நம்புகிறேன்' என தெரிவித்தார்.


இதேவேளை, இவ்வருட ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியில் மதீஷ பத்திரன மற்றும் துனித் வெல்லலகே ஆகியோரின் திறமைகள் தொடர்பில் இலங்கை பயிற்றுவிப்பாளரின் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.


"மதீஷ பத்திரன மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.


இருவரும் சர்வதேச கிரிக்கெட் களத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இளம் வீரர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.


எங்கள் அணியில் நல்ல பேட்ஸ்மேன்கள் மற்றும் நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.


ஆனால் கிரிக்கெட் அணி சமமான திறமையுடன் சீராக முன்னேறுவது முக்கியம்.


இந்தியா போன்ற அணிகளை தோற்கடிப்பது பற்றி யோசிக்க வேண்டுமானால், அந்த நிலைத்தன்மை முக்கியம். "உலகக் கோப்பையில் நாங்கள் சிறந்த முறையில் விளையாட வேண்டும்," என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.