பஸ் கட்டணங்களும், பாடசாலை போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிப்பு
இதன்படி, இந்த கட்டண அதிகரிப்பு நாளை (02) முதல் அமுலுக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (31) இரவு அமுலுக்கு வந்த எரிபொருள் விலை உயர்வை அடுத்து இன்று (1) முதல் அமுலுக்கு வரும் வகையில் 5% போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
"வியாழன் (31) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அது எமது சேவைகளை பாதிக்கிறது. அரசாங்கம் விலைகளை குறைத்த போது பெற்றோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக கட்டணத்தை குறைத்தோம். எனினும் இந்த நேரத்தில் நாங்கள் சிரமத்தை எதிர்நோக்குகிறோம்.
டீசல் விலையேற்றத்துடன், காப்புறுதி உட்பட ஏனைய சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பாரதூரமான பிரச்சினைகள் அதிகரித்துள்ளன" என குறித்த சங்கத்தின் தலைவர் என்.எம்.கே. ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்தார்.
Post a Comment