தயாசிறி தொடர்பில் மைத்திரியின் அதிரடி கருத்துக்கள்
தயாசிறி ஜயசேகர அனைவரையும் கவிழ்த்து கட்சியின் தலைவராக முற்பட்டதால்தான் அவர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எமது சகோதர ஊடகமான லங்காதீபவிடம் இன்று தெரிவித்தார்.
அவரின் செயற்பாடுகள் தொடர்பில் பல பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, நிலைமையைக் கருத்திற் கொண்டு அவரை கட்சியின் செயலாளராக இனியும் வைத்திருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
ஜயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாகவும், குற்றப்பத்திரிகை அடுத்த வாரம் அவருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் பிரதமர் பதவியை எடுப்பதற்காகவே தயாசிறி ஜயசேகர பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, அவ்வாறான சிறுபிள்ளைத் தனமான கனவு தமக்கு இல்லை என குறிப்பிட்டார்.
Post a Comment