வீரசேகர என்ற இனவாத குண்டரின் அச்சுறுத்தலினாலே நீதிபதி பதவி விலகினார்
சரத் வீரசேகர என்ற இனவாத குண்டர்களின் அச்சுறுத்தல் காரணமாகவே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா, பதவியில் இருந்து விலகியதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
குருந்தி விகாரை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திடீரென இந்தக் குண்டர்களின் அச்சுறுத்தல்களால் பதவி விலகியதாக அந்தக் கட்சியின் கல்வியாளர் புபுது ஜயகொட குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் குருந்தி விகாரை பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் வழிபாட்டுத் தலமாக விளங்குவதாகத் தெரிவித்த அவர், தொல்பொருள் திணைக்களமும் ஒரு இனவெறித் துறவியும் இணைந்து அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment