பிள்ளையான் என்னை கொலை செய்ய முயற்சித்தார் - அசாத் மௌலானா
-IBC-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக, பிள்ளையானின் சகாவும், ரீ.எம்.வி.பி கட்சியின் முன்னாள் பேச்சாளருமான அசாத் மௌலானா பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
தான் மட்டக்களப்பிற்கு பயணம் செய்யும்போது திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி தன்னைக் கொலை செய்ய பிள்ளையான் முயற்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இலங்கை புலனாய்வுப்பிரிவு மற்றும் பிள்ளையான் போன்றோரின் கரங்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கும் அசாத் மௌலானா, அந்த சதி நடவடிக்கை பற்றி தனக்கு தெரியும் என்பதால் தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக அசாத் மௌலானாவின் சாட்சியை அடிப்படையாகக்கொண்டு இன்றைய தினம் வெளிவர உள்ள சனல்-4 ஒளி ஆவணம் தமிழ் மக்கள் மத்தியிலும், மனித உரிமையாளர்கள் மத்தியிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்தச் சதிப் பின்னணி பற்றியும், தன்மீதான கொலை முயற்சி பற்றியும் வெளிவந்துள்ள அசாத் மௌலானாவின் குரல்பதிவு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
Post a Comment