ஆசைப்பட்டு எண்ணத் தொடங்கினால்...?
பேரண்டப் பெருவெளியில் உள்ள நட்சத்திரங்களை நீங்கள் எண்ணி முடிக்க நினைத்தால், நிச்சயமாக நீங்கள் உங்கள் பொன்னான நேர காலத்தை அனாவசியமாக வீணடிக்க ஆரம்பித்து விட்டீர்கள், என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முதலாவது விண்ணிலுள்ள விண்மீன்களின் எண்ணிக்கை நமது மண்ணின் பாலைவனங்கள், கடற்கரைகளில் உள்ள மணல் துளிகளின் எண்ணிக்கையை விட மிக மிக அதிகம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டாவதாக, கண் காணும் பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை 200 செக்ஸ்டில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, புரியும்படி கூறினால் 200 பில்லியன் டிரில்லியன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சரி நீங்கள் "என்னால் முடியும்" என ஆசைப்படு எண்ணத் தொடங்கினால் கூட 320 ஆண்டுகள் எண்ணிய பிறகு 10 பில்லியன் நட்சத்திரங்களை மாத்திரமே உங்களால் எண்ணி முடிக்க முடியும்.
இந்த எண்ணிக்கையானது, கண் காணும் பேரண்டத்திலுள்ள கோடிக்கணக்காக காலெக்ஸிகளில் நமது பால்வெளி மண்டலத்திலுள்ள 400 பில்லியன் நட்சத்திரங்களில் ஒரு சிறிய எண்ணிக்கை மாத்திரமே!
(நபியே!) நீர் கூறுவீராக: “என் இறைவனுடைய வார்த்தைகளை எழுதுவதற்கு கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!”
அல்குர்ஆன் : 18:109)
Imran Farook
Post a Comment