Header Ads



அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசா கேட்டு, நடைபயணம் செய்தவரின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியான தகவல்


அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை கோரி பலரட்டிலிருந்து சிட்னியில் பிரதமர் அலுவலகம் வரை நடைபயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நெய்ல் பராவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவுஸ்திரேலியா நிரந்தர விசா வழங்கியுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்ஜிங் விசாவினால் சிக்குண்டுள்ள அகதிகளிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் நியாயமான பதிலை வழங்கவேண்டும் என கோரி நெய்ல் பரா நடைபயணத்தை மேற்கொண்டிருந்தார் நெய்ல் பரா அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்தவர்களுடன் பிரிட்ஜிங் விசாவில் வசித்துவருகின்றார்.


இந்நிலையில் நெய்ல் பரா தனது நடைபயணத்தை முடிவை நெருங்கிக்கொண்டிருந்தவேளை விசா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது - சட்டத்தரணி கரினா போர்ட் இதனை தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், நான் மகிழ்ச்சியும் நன்றியும் உடையவனுமாக உள்ளேன் என பரா புளகாங்கிதத்துடன் தெரிவித்துள்ளதுடன் , நன்றி அவுஸ்திரேலியா இது எனது நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 2012 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்த பரா தனது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் பாதுகாப்பு கோரியிருந்த நிலையில் தற்போதுதான் இனிப்பான செய்தியை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது.    

1 comment:

  1. அவுஸ்ரேலியாவில் ஒரு அரசாங்கம் இருக்கின்றது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். தனிப்பட்ட ஒரு குடும்பம் அதன் கவலையையும் ஆதங்கத்தையும் தெரிவித்து கால்நடைப்பயணம் மேற்கொள்வதன் சிரமமும் அவர்களின் கவலையும் அரசாங்கத்துக்குப் புரிகின்றது. ஆனால் இலங்கையில் எத்தனை ஆர்ப்பாட்டங்கள், கால்நடைப்பயணங்கள், பொதுமக்களின் எதிர்ப்புகள் எதுவும் அரச மேலிடங்களுக்கு எட்டுவதில்லை. அதன் உண்மைக்கருத்து இலங்கையில் ஒரு அரசாங்கமும் நாட்டுத் தலைவரும் இல்லை, தியவன்னாவையில் செக்கு மாடுகளின் பண்புகளைக் கொண்டு ஒரு மாபெரிய கள்வர் கூட்டம் இருக்கின்றது. அவ்வளவுதான். எனவே இந்த நாட்டு மக்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு உ்ளளது. இந்த நாட்டில் ஒரு நியாயமான மக்களின் குரலை மதிக்கும் அதற்குச் செவிசாய்க்கும் ஒரு அரசாங்கத்தை நிறுவ இரவு பகலாகப்பாடுவது இலங்கை மக்களின் பாரிய பொறுப்பாகும்.

    ReplyDelete

Powered by Blogger.