நெருக்கடியில் சிறிலங்கன் எயார்லைன்ஸ்
சிறிலங்கன் எயார் லைன்ஸில் பணியாற்றும் விமானிகள் பதவி விகுவதால் குறித்த நிறுவனம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கடந்த வருடம் 60 விமானிகள் பதவியிலருந்து விலகியுள்ளனர்.
இலங்கையில் ஏறபட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, சம்பளத்தில் வரி அறவீடு மற்றும் நாட்டில் உறுதியற்ற தன்மை காரணமாக அவர்கள் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கடும் விமானிகள் பற்றாக்குறையை சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் எதிர்கொண்டுள்ளது.
அந்த வகையில் விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வெளிநாட்டு விமானிகளை நியமிக்கவுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதற்கு அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி திரு.ரிச்சர்ட் நட்டால் தெரிவித்தார்.
எயார்லங்காவின் நெருக்கடியைத் தீர்க்க மற்றொரு சனாதிபதி கமிசனை நியமித்தால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அது தீர்வை வழங்கி மிக விரைவில் இலங்கையின் பொருளாதாரம் சிங்கப்பூரையும் விட மேலோங்கும். 2045 ஆண்டாகும் போது இலங்கை சுவிட்சர்லாந்தையும் மிகைக்கும் என இலங்கை சனாதிபதி ரணில் விகுனும்சிங்க பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். எனவே எல்லா மக்களும் கலண்டர்களை கையில் எடுத்துக் கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தால் பொருளாதார வளமும் டொலர்களும் மடியில் வந்து குமியும். ஆஹ் ஆஹ் ஹாாா.
ReplyDelete