அரசாங்கத்திடம் மல்கம் ரஞ்சித் விடுத்துள்ள கோரிக்கை
இந்நிலையில் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கர்தினாலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் அதில் குறைபாடுகள் இருந்தால் கோடிட்டு காட்டுமாறு டிரான் அலஸ் கர்தினால் தரப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நீடித்து வரும் முரண்பாடுகளை முடித்துக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாக கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது கர்தினால் ரஞ்சித் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொணரும் வாக்குறுதியை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றும் ஜனாதிபதியோ சட்டமா அதிபரோ அல்லது எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தமது கடமையை செய்யவில்லை என்றும் கர்தினால் தெரிவித்துள்ளார்.
எனவே உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகளுக்கு ஆதரவளித்த குழுவை அரசாங்கம் பெயரிட வேண்டும் என்று கர்தினால் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment