இந்திய பாதுகாப்பு அமைச்சர் இறுதி, நேரத்தில் இலங்கைக்கு வராமல் விட்டது ஏன்..?
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயத்தை இறுதி நேரத்தில் இரத்து செய்தமை தொடர்பில் உலக அரசியல் தலைவர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் கடந்த வார இறுதியில் இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவிருந்தார், ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் விஜயத்தை இரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டது.
எனினும், அவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி தொடர்பில் எவ்வித அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படவில்லை.
சீன ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கோரிய பின்னணியிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய விடயங்கள் உருவாகி வரும் நிலையில், உலகம் முழுவதும் பல அரசியல் மற்றும் பாதுகாப்பு துறையினர் இது குறித்து பேசி வருகின்றனர்.
உலகின் நான்காவது பலம் வாய்ந்த இராணுவ சக்தியாக கருதப்படும் இந்திய பாதுகாப்பு படையின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டமை பாரிய பிரச்சனை என அரசியல் மற்றும் பாதுகாப்பு துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த விஜயத்தின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் குறித்து பல சுற்று முக்கிய பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அரசாங்க தலைவர்களை சந்திக்க இந்திய பாதுகாப்பு அமைச்சர் திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது
Post a Comment