Header Ads



கல்குடா முஸ்லிம் பிரதேசத்தின் முதலாவது பேராசிரியரும், முதலாவது கலாநிதியுமான எம்.சீ.ஏ.நாஸரை கௌவிக்கும் நிகழ்வு


எஸ்.எம்.எம்.முர்ஷித்


கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசத்தின் முதலாவது பேராசிரியரும் முதலாவது கலாநிதியுமான எம்.சீ.ஏ.நாஸரை கௌவிக்கும் நிகழ்வு வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில்  இடம்பெற்றது.


வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல் ஹாஜ் மௌலவி எம்.ஐ.எஸ்.முஹம்மட் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பள்ளிவாயல் நிருவாக சபையினர் ஊர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசத்தின் முதலாவது பேராசியராகப் பதவியுயர்வு தென்கிழக்கு பல்கலை கழகத்தில் கணக்கியல்துறை பேராசிரியராக நியமணம் பெற்றுள்ள கலாநிதி எம்.சீ.ஏ.நாஸர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் தான் பிறந்த பிரதேசத்திற்கும் தனது சமுகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று பள்ளிவாயல் நிருவாகம் தெரிவித்தது.



No comments

Powered by Blogger.