Header Ads



அதானிக்கு மீண்டும் சரிவு


இந்த ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற பங்குகளை விற்று வாங்கும் நிறுவனம், அதானி குழுமம் பங்குகளின் விலைகளை அதிகரித்துக் காட்டியதாக ஒரு ஆய்வறிக்கையில் குற்றம் சாட்டியபோது, ​​அதன் உரிமையாளர் கவுதம் அதானி உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்தார்.

ஆனால் இந்த அறிக்கை வந்தபின், அவரது சொத்து மதிப்பு 120 பில்லியன் டாலரில் இருந்து 39.9 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது.


அதாவது, ஒரே இரவில் அவரது சொத்து மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தது. அதானி குழுமம், அதன் நிறுவனங்களின் பங்கு விலைகளை மிகவும் அதிகரித்துக் காட்டியதாகவும், வரிவிலக்கு சூழல் நிலவும் நாடுகள் மூலம் மோசடி செய்வதாகவும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குற்றம் சாட்டியிருந்தது.


இருப்பினும், அதன் பின் இப்போது வரை அதானி குழுமத்தின் சில நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. ஆனால் ஆகஸ்ட் 31 அன்று, OCCRP ஆவணங்களின் அடிப்படையில் பிரிட்டிஷ் செய்தித்தாள்களான 'தி கார்டியன்' மற்றும் 'பைனான்சியல் டைம்ஸ்' வெளியிட்ட மற்றொரு ஆய்வறிக்கை அதானி குழுமத்துக்கு மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்த ஆய்வறிக்கை வந்த பிறகு, அதானி குழும நிறுவன பங்குகளின் விலை இதுவரை தோராயமாக ரூ.35,200 கோடி குறைந்துள்ளது.


ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் குறித்த ஆய்வறிக்கையின் ஆவணங்களில் என்ன தகவல்கள் இடம்பெற்றுள்ளன?


'தி கார்டியன்' மற்றும் 'பைனான்சியல் டைம்ஸ்' வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகள், வரிவிலக்கு சூழ்நிலையுள்ள நாடான மொரிஷியஸில், எமர்ஜிங் இந்தியா ஃபோகஸ் ஃபண்ட் (EIFF) மற்றும் ஈஎம் ரிசர்ஜிங் ஃபண்ட் (EMRF) ஆகிய இரண்டு நிதியங்கள் மூலம் 2013 முதல் 2018 வரை அதானி குழுமத்துக்குச் சொந்தமான 4 நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு பங்குகளின் விலைகளை செயற்கையாக அதிகரித்துக் காட்டியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இந்த இரண்டு நிதி நிறுவனங்கள் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதலீட்டாளர் நசீர் அலி ஷபானா அஹ்லி மற்றும் தைவான் முதலீட்டாளர் சாங் சுங் லியுங் ஆகியோர் அதானி குழும நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்திருந்தனர்.


இந்த பணம் பெர்முடா'ஸ் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் குளோபல் ஆப்பர்ச்சூனிட்டிஸ் (Bermuda's investment fund Global Opportunities) மூலம் கொண்டுவரப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், நசீர் அலி மற்றும் சாங் சுங் லியுங்கின் இந்த முதலீடு சுமார் 430 மில்லியன் டாலர் மதிப்புடையது. தற்போது அதன் மதிப்பு (தற்போதைய மாற்று விகிதம்) ரூ.3550 கோடி ஆகும்.


ஜனவரி 2017 இல், இந்த இரண்டு முதலீட்டாளர்களும் முறையே அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றில் 3.4, 4 மற்றும் 3.6 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.

No comments

Powered by Blogger.