காணாமற் போனாரின் குடும்ப ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை
- Ismathul Rahuman -
இனவாத தாக்குதல் மூலம் பயங்கரவாத தடை சட்டம் வெளிவரவுள்ளதாக திலீபன் நினைவேந்தல் ஊர்தி மீது நடத்தப்பட்ட மிலேச்ச தாக்குதலை கண்டித்து காணாமற்போனாரின் குடும்ப ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது.
காணாமற் போனாரின் குடும்ப ஒன்றியம் சார்பாக அசங்க அபேரத்ன வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
2023.09.15 பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அடுத்து நடக்க இருப்பது தெளிவானது. கடந்த காலத்தில் ஏற்பட்ட மக்கள் எதிர்பை பொறுப்படுத்தாது அரசு இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்து சட்டமாக நிரைவேற்றவுள்ளது.
இது போலவே 2023.09.17ம் திகதி திருகோணமலையில் திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கும், அதனோடு சென்ற தமிழ் மக்களுக்கும் சிங்கள காடையர் குழு மேற்கொண்ட தாக்குதல். இந்த மிலேச்ச தாக்குதலின் காட்சிகளை பார்க்கும்போது மிகவும் தெளிவானது, 2022 மே 09 காலிமுகத்திடல் போராட்டக் களத்தை தாக்தியது போல் காடையர் தாக்குதல் நடத்துவது பொலிஸ் உத்தியோகத்தர்களை முன்னிலையிலேயே. பொலிஸார் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தாக்குதலை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை.
அதனால் இத் தாக்குதல் நடப்பது எதாவதொரு அரசியல் அனுசரணையுடன் என்பது மிகவும் தெளிவானது. அதேபோல் கடந்த மே 18ம் திகதி யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூற கொழும்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியையும்,1983 கறுப்பு ஜுலைக்கு 40 வருடமாகும் போது அந்த இனப்படுகொலைக்கு எதிராக நடத்தப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டத்தின் போதும் சிவில் பிரஜைகள் சிலர் வந்து அதனை குழப்ப ஈடுபட்டனர். அங்கும் பொலிஸார் வலமைபோல் முறைகேடான செயலுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுதுவதற்கு பதிலாக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு அதனை பயன்படுத்திக்கொண்டார்கள்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுதல், திரகோணமலையில் திலீபன் நினைவேந்தல் ஊர்தியை தாக்குதல் ஆகிய இரண்டு நிகழ்வுகளும் எம்மை தெளிவுபெற வைப்பது என்ன? இவை திடீர், தனிமையான நிகழ்வுகள் அல்ல. மீண்டும் மீண்டும் இதுமாதிரியான செயல்கள் நடக்காமல் இருப்பதற்காக இதன் பின்னாலுள்ள இனவாதத்திற்கும் அரச பயங்கரவாதத்திற்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது சிறந்தது.
திலீபன் சாகும்வரை உண்னாவிரதத்தை ஆரம்பிப்பது இன்றைக்கு 36 வருடங்களுக்கு முன்பாக, அதாவது 1987 செப்டம்பர் 15. அன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக திலீபன் உண்னாவிரதத்தை ஆரம்பிக்கும் போது இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டு மூன்று நாட்கள். ஒப்பந்தம் கைச்சித்திட இரு தினங்களுக்கு முன் திலீபன் 5 கோரிக்கைகளை தூதுவர் ஊடாக இந்திய அரசுக்கு முன்வைத்தார்.
ஜே. ஆர் இன் 6/5 அரசு செயல்படுத்திய 1979- 47ம் இலக்க பயங்கரவாதத்தை தடுக்கும் தற்காலிக சட்டமூலத்தை இல்லாமல் செய்யுமாறும், பலவந்தமாக தடுத்து வைத்துள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதும் அதில் பிரதான கோரிக்கையாகும்.
ஆனாலும் இக் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.
அதன் அடிப்படையில் திலீபன் உண்னாவிரதத்தை ஆரம்பித்தது தமிழ் மக்களுக்கும், அதேபோல் இன்று சிங்களம், முஸ்லிம் மக்களுக்கும் பாதிப்பான பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்தினால் பேசும், கருத்துச் சொல்லும் சுதந்திரம், ஒன்றுகூடல் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமைகளுக்கு விழும் விளங்காகும், பலவந்தமாக தடுத்து வைத்தல், கடும் சித்திரவதைக்கு உட்படாமல் இருப்பதற்கான சுதந்திரமும் உரிமையும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சட்டத்தின் ஊடாக நடக்கும் பாதிப்புக்கு எதிராகவே.
அன்று தெற்கில் சிங்கள மக்கள் ஊடாக இந்த பயங்கரவாத சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு தோன்றவில்லை.
ஆனால் தமிழ் மக்கள் போல் தெற்கில் சிங்கள மக்களும் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டனர். இந்த ஒழுக்கற்ற சட்டத்திற்கு எதிராக எழுந்துநிற்கும் போது திலீபனுக்கு ஜே. ஆரின் அரசுடனோ இந்தியாவுடனோ இணக்கப்பாடு இருக்கவில்லை. விமல் வீரவன்ச போல் அவர் உண்ணாவிரதத்தின் போது களவாக பிஸ்கட் சாப்பிடவில்லை.
ஈனியா தேசப்பற்றாளர்கள், இனவாத பிக்குகள் சென்று பிரித் பாணம் புகட்டுவது போல் மதகுருமார் சென்று திலீபனுக்கு நீரோ கஞ்சியோ புகட்டவில்லை. பின்னர் வீரவன்ச உண்னாவிரதத்தை கைவிட்டது போல் திலீபனை பார்ப்பதற்கு பிரபாகரன் சென்றாலும் திலீபன் பிரபாகரன் முன்னிலையில் உண்னாவிரதத்தை கைவிடவில்லை. அதனால் இந்த உலகில் மனிதனுக்கு உச்சபச்ச அமைதியாக எதிர்ப்பு காட்ட முடியும்.
எறும்புக்கு கூட கஷ்டமில்லாத அஹிம்சை முறையில் உண்னாவிரதம் இருக்கும் முறையை தெரிவுசெய்த திலீபனின் நேசத்திற்கு தலைகுனிய பிரபாகரனுக்கும் ஏற்பட்டது.
அதுபோல் தமிழ் மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைக்காக அரசியல் தீர்வோ வன்முறை அற்ற வேலை திட்டத்திற்கு பதிலாக பிரபாகரன் மேலும் மேலும் யுத்தத்தை நோக்கி தள்ளப்படவும் திலீபனின் கோரிக்கைக்கு செவி சாய்க்காது ஜே. ஆரின் அரசு உணவின்றி உண்னாவிரதத்தில் திலீபன் மரணமாவதை பார்துக்கொண்டுருந்ததும் பாதிப்பானது.
இந்தியா, இலங்கை அரசு இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக எந்த கவணமும் இல்லாமல், பயங்கரவாத தடை சட்டம் தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமன்றி எதிர்காலத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களும் இறையாகுவார்கள் என திலீபன் கூறியது ஒப்புவிக்க அவரின் மரணத்தின் பின் நீண்ட நாட்கள் செல்லவில்லை.
அன்று தமிழ் மக்களை இலக்காகக்கொண்டு ஆரம்பித்த அரச பயங்கரவாதம் எனும் கையானது இந்த பயங்கரவாத தடை சட்டத்தை கொண்டுவந்ததினால் நாகரீகத்தை கீழ்படியவைத்த அந்த சட்டம் 1987-89 வன்செயலில் தெற்கில் சிங்கள மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படவும், காணாமல் ஆக்கப்படவும் அரசு பயன்படுத்தியது.
இந்த மிலேச்ச சட்டத்திற்கு எதிராக திலீபனின் உண்னாவிரதத்தின் சரியாக 36 வருடங்கள் சம்பூரணமாகும் தினத்தன்று ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை வர்த்தமானி மூலம் வெளியிட்டது.
சில மாதங்களுக்கு முன் அதனை பாராளுமன்றத்தில் சமர்பிக்க சகல ஆயத்தங்களையும் செய்திருந்தும் மக்கள் எதிர்பினால் அதனை சுருட்டிக்கொள்ள வேண்டி ஏற்பட்டது.
தன்னை தவிர எந்த ஒருவரையும் மனிதனையும் கைது செய்வதற்கும் நீதிமன்ற தீர்ப்பு இன்றி தடுத்து வைக்கவும், கட்சியை அல்லது அமைப்பை தடை செய்தல், எந்த ஒரு செயலையும் பயங்கரவாத செயலாக காட்டி நிறுத்துவதற்கு இந்த சட்டத்தின் ஊடாக அதிகாரம் கிடைக்கின்றது.
அதிகாரத்தை பாதுகாக்க சமூகத்தை பயங்கரவாதமாக்குவதே இந்த சட்டத்தை கொண்டுவருவதன் மூலம் நடைபெறும்.
அதிகாரத்தை தக்க வைக்க வரலாற்றில் நடாத்திய மிலேச்ச குற்றச்செயல்கள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கு இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை தோற்கடிக்க வேண்டும்.
அதுபோல் தற்போது நடைமுறைபடுத்தப்படும் 1979 - 49ம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். வடக்கு போல் தெற்கிலும் சமூகத்திற்கு மத்தியில் அரச பயங்கரவாததிற்கு எதிரான கருத்தை கட்டியெழுப்பதன் மூலம் அதனை செய்ய முடியும்.
" எமக்கு சிங்கள மக்களுடன் பிரச்சிணை இல்லை.' எமக்கு பிரச்சிணை உள்ளது அரசியல்வாதிகள் உடனே" திலீபன் அன்று கூறியது இன்றும் செல்லுபடியாகும்.
அதனால்தான் திலீபனை மீண்டும் மீண்டும் நினைவு கூற வேண்டும்.
அரசியல் அனுசரனையின் கீழ் காடையர் குழுவை பயன்படுத்தி திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மற்றும் அதில் பங்குபற்றிய தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட மிலேச்ச தாக்குதல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள நடாத்திய இனவாதத்தை தூண்டும் இன்னுமொரு ஈனச்செயலாகும். அதற்கு அகப்படாமல் இருப்போம்.
Post a Comment