Header Ads



பட்டதாரி யுவதியுடன் தகாத உறவில் இருந்தவர் அடித்துக்கொலை


பட்டதாரி  யுவதியுடன் தகாத உறவில் இருந்தவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


யுவதி ஒருவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயற்சித்தார் என கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக ரொட்டம்ப பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இரத்தினபுரி, கஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபர் குறித்த யுவதியுடன் சிறிது காலமாக காதல் உறவில் இருந்துள்ளார்.


இந்நிலையில்,  யுவதி அவருடனான உறவை நிறுத்தியதால், காதலன் தொலைபேசியில் திட்டி மிரட்டியுள்ளார்.


இச்சம்பவத்துக்கு முன்னைய நாளும் (3) யுவதியை மிரட்டியதால் அவரின் பெற்றோரும் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.


இந்நிலையில், நேற்று முன்தினம் (4) அந்த யுவதியின் வீட்டுக்கு வந்த நபர்,  யுவதியை பலாத்காரமாக அழைத்துச் செல்ல முயற்பட்டபோதே  தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக  பொலிஸார் கூறியுள்ளனர். 

No comments

Powered by Blogger.