முஸ்லிம் குழந்தைகளின் முத்த மழையில் நனைந்த கலெக்டர் திவ்யா ஐயர்
பத்தனம்திட்டா முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற மீலாது விழா நிகழ்ச்சியில் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா ஐயர் தனது மகனுடன் கலந்து கொண்டு உரையாற்றி சிறுவர் சிறுமியருக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.
மாவட்ட ஆட்சியருக்கான புதிய இல்ல கட்டுமானமும் அந்த பகுதியில் நடைபெறுவதை சுட்டிக்காட்டிய கலெக்டர், அங்கு கூடியிருந்த குழந்தைகளிடம் விரைவில் நானும் இங்கே உங்கள் அருகில் குடியேறுவதால் எனது மகனையும் உங்களோடு விளையாட்டுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியதை கேட்டு குழந்தைகள் குதூகலித்தனர்.
விழா முடிந்து மேடையை விட்டு இறங்கி நடந்து வரும் போது ஐந்து வயதான ஒரு சிறுமி திடீரென மறித்து
"கலெக்டரே... நான் உங்களுக்கு ஒரு முத்தம் தரட்டுமா" என்று கேட்க திவ்யா ஐயரும் மிக மகிழ்ச்சியாக குனிந்து அந்த சிறுமி கொடுத்த அன்பு முத்தத்தை பெற்றுக் கொள்ள மீதமுள்ள குழந்தைகளும் கலெக்டரை சுற்றி வளைத்தனர்.
அந்த சிறுமியருக்கும் ஏமாற்றம் தர விரும்பாத கலெக்டர் எல்லோரின் முத்தங்களையும் பெற்று மிகவும் மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்...
Colachel Azheem
Post a Comment