Header Ads



மிகக் கடுமையாக பேசவுள்ளேன்


உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து கடந்த 4 ஆண்டுகளாக துன்புறுத்திய போதிலும் தற்போது தான் உண்மை வெளிவருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மைத்திரி இவ்வாறு சுட்டிக்காட்டினார்.


“சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் சமூகத்தில் நிலவிய பல குற்றச்சாட்டுகளுக்கு தீர்வை கிடைத்துள்ளது.


நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தில் மிகக் கடுமையாகப் பேசுவேன். பலரது குற்றச்சாட்டுகளுக்கு இதில் தீர்வு கிடைக்கும்.


சேனல் 4 ஆவணப்படம் மற்றும் உயிர்த்த குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு கொழும்பில் உள்ள ஐ.நா சபையின் அலுவலகத்திடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. ​​மைதி3 கிராமிய மக்களுக்கு பூச்சாண்டி காட்டுகிறார். உயிர்த்த ஞாயிறு கொலையில் மைதிரிக்கு நேரடியாக தொடர்பிருப்பதாக ஒன்றுக்கு மேற்பட்ட விசாரணைக்குழுக்கள் தெரிவித்து உயர் நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் செலுத்துமாறு நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்காது அந்த பணத்தையும் செலுத்தாது குற்றவாளிக்கூட்டில் இருந்து கொண்டு வௌியில் சுத்தம் பேசுகின்றார். இந்த நாடு அழிவுப்பாதையை நோக்கி விரைந்து கொண்டிருக்க இது போன்ற வெறும் நயவஞ்சர்கள் தான் காரணம் என்பதை இந்த நாட்டு மக்கள் எப்போதோ தெரிந்து வைத்திருக்கின்றார்கள். ஒரு சரியான தேர்தல் நடைபெற்றால் உண்மைகள் நிச்சியம் வௌிவந்து உரியவர்களுக்கு தண்டனையும் வழங்கும்.

    ReplyDelete

Powered by Blogger.