பல ஆச்சரியங்களை எதிர்பாருஙகள் - ரணில்
இன்று -06- பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயற்படும் அதேவேளை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் செயற்படுகின்ற அதேவேளை, கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை சில தரப்பினர் தடம்புரளச் செய்வதற்கு முயற்சித்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடனை மறுசீரமைக்கத் தவறினால் பெரும் நெருக்கடிகள் ஏற்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எனவே, தேவையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பாராளுமன்றத்திடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, முதற்கட்டமாக உத்தேச உள்நாட்டு வருமான (திருத்த) சட்டமூலத்தை பாராளுமன்றம் விவாதித்து நிறைவேற்ற வேண்டும்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பல ஆச்சரியங்கள் உள்ளடக்கப்படும் என்றும் ஜனாதிபதி சபைக்கு அறிவித்தார்.
Post a Comment