தெல்கஹவத்தையை அச்சுறுத்தும் "நுரை"
ஹோமாகம கட்டுவன கைத்தொழில் வலயத்திற்கு அருகில் உள்ள தெல்கஹவத்தை வயல்வெளியில் நீர் வடிந்தோடும் கால்வாயில் பல நாட்களாக வெள்ளை நிறத்திலான நுரை காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அவற்றைத் தொட்டால் அரிப்பு, வாந்தி ஏற்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த பிரதேசத்திற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று (03) வந்து, நிலைமைகளை பரிசோதித்ததுடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Post a Comment