விபத்தில் சிக்கியவரின் பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்
தொடருந்து சாரதிகள் தொழிற்சங்கம் நேற்று முன்தினம் (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் கடும் சனநெரிசலுக்கு மத்தியில் தொடருந்தின் கூரையில் குறித்த இளைஞன் பயணித்த நிலையில் பாலத்தில் மோதுண்டு கீழே விழுந்து உயிரிழந்திருந்தார்.
இந்த விபத்தில் இரத்மலானை தேசிய பயிலுனர் கல்லுாரியில் கல்வி பயின்ற கம்பஹா மொரகொட பிரதேசத்தை சேர்ந்த டொன் டினித் இந்துவர என்ற 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்திருந்தார்.
இதனை தொடர்ந்து இராகமை போதனா வைத்தியசாலை முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாக இராகமை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி எஸ்.ஐ.எஸ். திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வைத்தியர்களின் ஆலோசனையுடன் அவரது கண்களை தானம் செய்ய பெற்றோர் முன்வந்துள்ளனர்.
இதேவேளை, விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபாய் வழங்க தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும், வேலை நிறுத்தம் காரணமாக நேற்று (12) முதல் தொடருந்து நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment