Header Ads



மாணவர்களின் தொலைபேசி பாவனைக்கு தடை..?-


பாடசாலை மாணவர்களின் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் நாட்டில் 18 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி பாவனைக்கான தடைச் சட்டத்தை கொண்டு வரத் தயார் எனவும், இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.


கைத்தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் சிறுவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் , மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் குழந்தைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் கூறினார்.


தற்போது பல சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளினால் தமது வாழ்வை நாசமாக்கிக் கொண்டிருப்பதாகவும், இன்று அவர்கள் பாடசாலைக்கு கையடக்கத் தொலைபேசியைக் கூட எடுத்துச் செல்வதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.


எனவே மாணவர்களின் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அது தொடர்பான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்,

1 comment:

  1. இந்த முக்கியமான விடயத்தைச் சட்டமூலம் நிறைவேற்றி சட்டமாக்க மேற்படி பா.உ. அவர்களின் செயலை நாம் பாராட்டுகின்றோம். அவருடைய முயற்சி கைகூட எமது பிரார்த்தனைகள்.

    ReplyDelete

Powered by Blogger.