மைத்திரிக்கு தடை போட்டது நீதிமன்றம்
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறியிடம் விளக்கம் கோரி கட்சியின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை நிறைவேற்றுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தயாசிறி ஜயசேகர சமர்ப்பித்த முறைப்பாட்டை பரிசீலித்த பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வரை இந்த தடை உத்தரவை அமுல்படுத்தி கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான உத்தரவிட்டார்.
தயாசிறி ஜயசேகர சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் எனவும், அது குறித்து விளக்கமளிக்குமாறும் கடந்த 18ஆம் திகதி கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் கடிதம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் பிரகாரம் அவ்வாறான காரணங்களை கூறி கடிதம் அனுப்புவதற்கு கட்சியின் தலைவருக்கு அதிகாரம் இல்லை எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பின்னர் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Post a Comment