ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், ரணில் நியமிக்கும் குழுவிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக செனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் குழுவிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாதென இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று -12- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தெரிவுக்குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் என்பவற்றை நியமிப்பதால் மக்களின் பணமும் நேரமும் வீணடிக்கப்படுமே, தவிர நீதியை எதிர்பார்க்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment