பிரித்தானிய - லெஸ்ரர் பல்கலைக்கழக, துணைவேந்தராக இலங்கையர்
எதிர்வரும் நவம்பர் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் செயற்படும்படியாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 2018 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி லெஸ்டர் பல்கலைக்கழகம் 167ஆம் இடத்திலும் பிரித்தானியாவில், 25ஆம் இடத்திலும் உள்ளது.
பேராசிரியர் கனகராஜா 1985 ஆம் ஆண்டு கணிதத்துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று கேம்பிறிஜ் பல்கலைக்கழத்திற்குத் தெரிவாகிக் கல்வியைப் பெற்றவர் ஆவர்.
1966இல் சுண்டிக்குளியில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் தந்தை கனகராஜா யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும் தாய் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் ஆசிரியையாகவும் இருந்தவர்கள் ஆவர்.
பேராசிரியர் நிஷான் கனகராஜா 2019இல் இருந்து லெசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் (University of Leicester) உபவேந்தராக இருந்து வருகின்றார். அவர் மீளவும் இரண்டாம் தடவை உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment