Header Ads



எனது மரணத்திற்கு பிறகும், நிதி தொடர்ந்து கிடைக்கும் - யூசுப் அலி


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு யூசுப் அலி வழங்கிய 11/2 கோடி.


உலகப்புகழ் பெற்ற மாஜிக் நிபுணர் கோபிநாத் முதுகாட் திருவனந்தபுரத்தில் மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக Different Art Centre (DAC) என்ற பெயரில் சிறப்பு பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார்.


பலதரப்பட்ட குறைபாடு கொண்ட சுமார் 500 மாணவர்கள் பயிலும் சிறப்பு பள்ளியில் மாணவ மாணவிகள்  தனித்திறமை கண்டறிந்து பயிற்சி வழங்குவதோடு, அவர்களின் உடல் குறைபாடுக்காக பிசியோதெரபி உட்பட  மருத்துவ சிகிச்சையும் வழங்கும் வகையில் அந்த நிறுவனம் இயங்கி வருகிறது.


இன்று DAC நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லூலூ குரூப் சேர்மன் எம் ஏ யூசுப் அலி அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க தனது ஸதகாவாக ஒன்றரை கோடி ரூபாய் வழங்குவதாக கூறி அதற்கான செக் கோபிநாத் முதுகாடிடம் வழங்கினார்.


மேலும் பேசிய யூசுப் அலி அவர்கள்,


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வேண்டி இயங்கும் இந்த நிறுவனத்திற்கு ஆண்டு தோறும் ஒரு கோடி ரூபாய் லூலூ குரூப் சார்பில் வழங்கப்படும் என்றும் தனது மரணத்திற்கு பிறகும் அந்த நிதி தொடர்ந்து கிடைக்கும் வகையில் நிறுவனம் மூலம் ஆவணங்கள் தயாரித்து வழங்குவதாகம் கூறியது அங்கு குழுமியிருந்த குழந்தைகளின் பெற்றோர் கண்களில் கண்ணீர் வரவழைக்க, கோபிநாத் முதுகாட் பேசுவதற்கு வார்த்தையின்றி யூசுப் அலியை கட்டியணைத்தார்.

Colachel Azheem

No comments

Powered by Blogger.