Header Ads



பொருளாதார நெருக்கடி, விலைவாசி ஏற்றம் இறக்கம் - எப்படி ஏற்படுகிறது..?


பணத்தாசை பிடித்த அந்த வியாபாரி வறுமைப்பட்ட அந்த ஊருக்குள் புகுந்தார். அவர்களிடமிருந்த கழுதைகளை 10 டாலர்களுக்கு வாங்குவதாக அறிவித்தார். அவர்களில் சிலர் அவரிடம் விற்றனர்.

பின்னர் அந்த வியாபாரி 20 டாலர்களுக்கு கழுதைகளை வாங்குவதாக அறிவித்தார். பலர் ஓடிவந்து விற்றனர். பின்னர் 30 டாலர்கள் கொடுத்தாவது கழுதைகளை வாங்குவதாக அறிவித்தார். கிராமத்தில் உள்ள எல்லோரும் முண்டியடித்துக் கொண்டுவந்து விற்றனர்.

பின்னர் 50 டாலர்கள் கொடுத்தாவது கழுதைகளை வாங்குவதாக அறிவித்தார். பின்னர் ஒரு சிறு விடுமுறையில் வெளியே சென்றார்.

உள்ளூர் சந்தையில் கழுதைகளுக்கு நல்ல கேள்வி ஏற்பட்டது. பக்கத்து ஊர்களில் தேடிப்பார்த்தனர், கிடைக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் இந்த வியாபாரி தனது முகவர் ஒருவரை அந்த ஊருக்குள் அனுப்பி, அவர்களிடமிருந்து வாங்கிய அதே கழுதைகளை, ஒரு கழுதைக்கு 40 டாலர்கள் வீதம் தருவதாக அறிவித்தார்.

உடனே ஊர் மக்கள் முண்டியடித்துக்கொண்டு கழுதைகளை வாங்கினார்கள். அந்த வியாபாரியிடம் திருப்பி 50 டாலர்களுக்கு விக்கலாம் என்பதால் ஊர் வங்கயில் எல்லோரும் கடன் பெற்றனர். வீடு மனைகள், நகை நெட்டுக்களை எல்லாம் விற்று கழுதை வாங்கினார்கள்.

ஆனால், பாவம்! வியாபாரியும் அவரது முகவரும் சட்டென்று தலைமறைவானார்கள்.

ஊருக்குள் கழுதை ஒன்றுக்கு 5 டாலரும் பொறுமதியற்ற நிலை ஆகிவிட்டது. வங்கிக் கடனை அடைக்க முடியாமல் மக்கள் திண்டாடினார்கள். ஊர் வங்கியும் திவாலாகிவிட்டது.

👉
வியாபாரி என்ற சொல்லை நீக்கிவிட்டு அந்த இடத்தில் வல்லரசுகள் அல்லது கார்பரேட் நிறுவனங்கள் என்று சொல்லை இணைத்துப் பாருங்கள்.

👉
கழுதை என்ற சொல்லை நீக்கிவிட்டு அந்த இடத்தில் வணிகச்சரக்குகள் என்ற சொல்லை இணைத்துப் பாருங்கள்!

- தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.