Header Ads



வாகன இறக்குமதி - இன்று வெளியான புதிய அறிவிப்பு


2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க உத்தேசித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் இன்று (05) தெரிவித்துள்ளனர்.


இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க நிதி தொடர்பான குழுவில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக  இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு முகங்கொடுத்து கோதுமை மா மற்றும் டைல்ஸ் போன்ற தொழில் துறை போன்று,  இரட்டை அதிகார வரம்பு நிலைமையை தவிர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எவ்வளவு காலம் நடைமுறையில் இருக்கும் என குழு வினவியபோது அதிகாரிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.


அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று (05) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

No comments

Powered by Blogger.