பிரபாகரனை உருவாக்கியது யார் தெரியுமா..?
பண்டாரநாயக்கா - செல்வநாயகம் (பண்டா - செல்வா) ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த நாட்டில் பிரபாகரன் உருவாக்கி இருக்க மாட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வியடத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், 1956இல் சுதந்திரக்கட்சியின் ஆட்சியில் சிங்கள மொழி அரசகரும மொழியாக்கப்பட்டது. இதற்கு வடக்கில் இருந்து எதிர்ப்புகள் வலுத்தன. சர்ச்சைகள் உருவாகின.
அதன்பின்னர் தமிழ் மொழியும் அரச மொழியாக்கப்பட்டது. செல்வா - பண்டா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முற்பட்ட போது இன்று போலவே அன்றும் மகா சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பண்டாரநாயக்காவின் வீடு சுற்றிவளைக்கப்பட்டது. இறுதியில் குறித்த ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க கிழித்தெறிந்தார். அந்த ஒப்பந்தம் நடைமுறையாகி இருந்தால் பிரபாகரன் உருவாகி இருக்கமாட்டார்.
நாட்டில் போரும் ஏற்பட்டிருக்காது. எனவே பிக்குகளே பிரபாகரனை உருவாக்கினர். அதேபோல டட்லி - செல்வா ஒப்பந்தத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபாகரனை உருவாக்க அடித்தளமிட்டது இவரும் இவருடைய அடிவருடிகளும் தான். இப்போது அந்த உண்மையை மறைக்க பிக்குமார்களுக்கு விரல் நீட்டப்படுகின்றது. இவரும் இவவோடிருந்த பிக்குகளும் தான் அந்த திட்டத்தை வகுத்தனர். இப்போது அந்த இனவாதத்திலிருந்து ஒதுங்குவதற்கு இந்த நபர் முயற்சி செய்கின்றார்.இதற்குத் தான் dirty politics என உலகம் கூறுகின்றது.
ReplyDelete