Header Ads



தரையிறங்கும் போது இரண்டாக உடைந்த விமானம்


மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஒரு சிறிய ரக விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விபத்து இன்று -14- மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் எட்டுப் பேர் படுகாயமடைந்துள்ளதாக மும்பை விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றனன.


விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தை அடுத்து இரண்டு ஒடுபாதைகள் மூடப்பட்டுள்ளன.


இதனால் மும்பை விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


VSR வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான லியர்ஜெட் 45 விமானம் VT-DBL, விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பை வந்தபோது, மும்பை விமான நிலைய ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது.


விமானத்தில் ஆறு பயணிகளும் இரண்டு பணியாளர்களும் இருந்துள்ளனர். விபத்து ஏற்பட்ட போது அந்த பகுதியில் கனமழை பெய்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகாரிகளின் கூற்றுப்படி, இரண்டு விஸ்தாரா மற்றும் ஒரு ஆகாசா ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூரு விமான நிலையத்தை நோக்கி திருப்பி விடப்பட்டது.


துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் நோக்கி திருப்பி விடப்பட்டது.


மேலும், டேராடூனில் இருந்து மும்பை சென்ற விஸ்தரா விமானம் கோவா விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. சூரத் விமான நிலையத்தில் மொத்தம் ஐந்து விமானங்கள் தரையிறங்கியுள்ளன.


மேலும் இரண்டு விமானங்கள் வான்வெளியில் வட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

No comments

Powered by Blogger.