Header Ads



பிரான்ஸ் நாட்டை ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றிய உதுமானிய படைகள்


இப்படத்திலுள்ள பிரங்கிக்குண்டு உதுமானியருடையதாகும்.


இது பிரான்சிய மன்னன் பிரான்கொய்ஸ் I – François – அவர்கள்  உதுமானிய பேரரசர் சுல்தான் சுலைமானிடம் ஸ்பெயினின் மன்னரும் புனித ரோமானியப் பேரரசருமான சார்லாகன் - Charlacan - இன் பிடியில் இருந்து பிரான்ஸ் இன் நைஸ் நகரை மீட்டெடுப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட ராணுவ உதவியின் நினைவாக வைக்கப்பட்டதாகும்.


பிரான்ஸ் மன்னனின் வேண்டுகோளுக்கமைவாக உதுமானிய சுல்தான் சுலைமான், கடற்படைத்தளபதி கைருத்தீன் பாபரோசா - Khairuddin Barbarossa – தலைமையில் இஸ்தான்பூல் நகரிலிருந்து ஒரு படையை முஹர்ரம் மாதம்  ஹிஜ்ரி 950 / May 1543  இல் கடல்மார்க்கமாக பிரான்சிற்கு அனுப்பினார். அக்கப்பல் பிரான்ஸின் தென்கரையை அடைந்தது.ஹிஜ்ரி 950 இன் இளவேனிற்காலத்தில் ஜூலை 1543 இல் பாபரோசாவின் படை நைஸ் நகரை கடுமையான  தாக்குதலின் விளைவாக கையகப்படுத்தியது. அங்கிருந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட போப்பாண்டவர், ஸ்பானிய மற்றும் ஆங்கிலப் படைகள் வெளியேற்றப்பட்டனர்.


உதுமானிய படைகள் பிரான்ஸ் நாட்டை வெளி ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றிய கி.பி. 1543 ஆம் ஆண்டை நினைவுகூரும் விதமாக உதுமானியர்களின் பிரங்கிக்குண்டொன்று நினைவுச்சின்னமாக்கினர். இன்றும் இக்குண்டு பிரெஞ்சு நகரமான நைஸின் தெருவை அலங்கரிக்கிறது.


AKBAR  RAFEEK

No comments

Powered by Blogger.