Header Ads



நான் பிரபாகரனிடம் கேள்வி கேட்டவுடன்தான், ஹக்கீம் கட்டியிருந்த கையை கீழே போட்டார்


புலிகளின் தலைவர் பிரபாகரனை கண்டு தொடை நடுங்கி, கைகள் இரண்டையும் கட்டி ஹக்கீம் இருந்த இருப்புக்கள் தம்முடைய அகக்காட்சியிலே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்துள்ளார்.


அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சூழலில் ரவூப் ஹக்கீமை சமநிலைப்படுத்துவதற்காக தவிசாளராக இருந்த நான் அப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் “அண்ணன் சிங்களப் பெரும்பான்மை உங்களை அடிமையாக்குகிறது என்பதற்காக தானே நீங்கள் ஆயுதம் தூக்கினீர்கள்?


ஆகவே மேலுமொரு தமிழ் பேரினவாதத்தை உருவெடுக்க வைத்து சிறுபான்மையாக வாழ்கின்ற முஸ்லிம்களையும் ஆயுதம் தூக்க சொல்லப் போகின்றீர்களா” என கேட்டவுடன் தான் ரவூப் ஹக்கீம் அவரது கட்டியிருந்த கையை எடுத்தார்.


அட இப்படியும் பேச முடியுமா என்று. இது ஒரு வரலாறு அதற்காக சொல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. ஏன் சொல்லலாமே, பிரபாகரனை நான் எனது கட்டுப்பாட்டின் கீழ்தான் வைத்திருந்தேன். எனது பேச்சைக் கேட்கத் தவறியபோது அவன் கொல்லப்பட்டான் எனக்கூறும் அளவுக்கு உங்கள் கைவாறு தௌிவாகத் தெரிகிறது. කටෙන් බතල හිටවන ටොම්පශයා

    ReplyDelete

Powered by Blogger.