Header Ads



தங்கப்பனின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய பிரார்த்திப்போம்


பாலராமபுரம் அஞ்சுவண்ணம் பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாமிய மார்க்கம் தழுவி தனது பெயரை முகமது இஸ்மாயில் ஆனார்.


குடும்பத்தில் சில மனஸ்தாபம் இருந்தாலும் அவரது முடிவுக்கு பின்னர் எவரும் எதிராக இல்லை. இஸ்மாயீலுக்கு பாலராமபுரம் டவுன் முஸ்லிம் ஜமாஅத் அங்கத்துவம் வழங்கிட பள்ளியோடு  தொடர்பில் இருந்தார்.


இந்து மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட தனது குடும்பத்தினரிடம் தான் மரணமடைந்தால் பாலராமபுரம் பள்ளியில் தகவல் தெரிவித்து தன்னை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.


சமீப நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட இஸ்மாயில் இரண்டு தினங்கள் முன்பு மரணமடைந்தார்.


இஸ்மாயில் விருப்பப்படி அவரது குடும்பத்தினர் பள்ளிவாசலில் தகவல் தெரிவிக்க ஜமாஅத் நிர்வாகிகள் வீட்டுக்கு சென்று குளிப்பாட்டி கஃபன் செய்து இஸ்மாயில் ஜனாசாவை அடக்கம் செய்தனர்.


தனது சகோதரர் மீதான பாசத்தில் இஸ்மாயில் சகோதரி கமலாம்பாள் ஜனாசாவின் அருகிலேயே நீண்ட நேரம் அமர்ந்திருந்ததும், மகன் அஜய்கோஷ் மருமகன் அஜய் உட்பட உறவினர்கள் ஜனாசாவை சுமந்து வந்து அவரது விருப்பப்படி மசூதியில் அடக்கம் செய்ய முன்வந்ததும் இஸ்மாயில் ஜனாசா தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டது அந்த பகுதியினரை ஆச்சர்யப்பட வைத்தது.


இஸ்மாயிலின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய பிரார்த்திப்போம்


- Azheem -

No comments

Powered by Blogger.