Header Ads



ஹஜ் டுவர் ஒப்பரேஷன் கமிட்டியின் வருடாந்த கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவு விபரமும்


கடந்த 35 ஆண்டுகளாகச் செயற்படும் ஹஜ் டுவர் ஒப்பரேஷன் கமிட்டியின் வருடாந்தக் கூட்டமும் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவும் சென்ற 2023.09.08 ஆம் திகதி நுவரெலிய - அரலிய கிரீன் சிட்டி ஹோட்டலில் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கௌரவப் பணிப்பாளர் அல் ஹாஜ் எம்.இஸட்.எம். பைசல் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.


இதன் போது, புதிய நிர்வாகத் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.


ஹஜ் டுவர் கமிட்டியின் புதிய நிர்வாக உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவுசெய்யப்பட்டனர்.


தலைவர் : அல் ஹாஜ் ஏ.சீ.பி.எம். கரீம் (கரீம் லங்கா டிரவல்ஸ்)


உப தலைவர்கள் : அல் ஹாஜ் எஸ்.ஏ. அமானுல்லாஹ் (எம்.பி.எஸ். ஹஜ் டிரவல்ஸ்), அல் ஹாஜ் எம்.எஸ்.எம். பாரூக் (ஸேஃப்வே டிரவல்ஸ்)


பொதுச் செயலாளர் : அல் ஹாஜ் எம்.எஸ்.எஸ். சமூன் (கைராஸ் இன்டர் நெஷனல் டிரவல்ஸ்)


உதவிப் பொதுச் செயலாளர் : அல் ஹாஜ் எம். அஸ்கர் (குலோபல் டிஸர்)


பொருளாளர் : அல் ஹாஜ் எம்.ஜே. குஹாப்தீன் (டிரவல் டாடா)


உதவிப் பொருளாளர் : அல் ஹாஜ் எம்.எப்.என்.எம். உஸாமா (மினா டிரவல்ஸ்) ஆகியோருடன்


கமிட்டி உறுப்பினர்களாக அல் ஹாஜ் ஹ{ஸைன் கலீல் (புராக் டிரவல்ஸ்), அல் ஹாஜ் ஏ.பி.எம். நுஃமான் (இமாரா டிரவல்ஸ்), அல் ஹாஜ் எச்.எம். சமீம் (சபா டிரவல்ஸ்), அல் ஹாஜ் எம். நௌபர் (ஏஸியன் டிரவல்ஸ்), அல் ஹாஜ் ஏ.ஜே. எம். லத்தீப் (ஹஃப்ஸா டிரவல்ஸ்) மற்றும் அல் ஹாஜ் ஏ.பி.எம். ஸ{ஹைர் (ஸ{ஹைர் டிரவல்ஸ்) ஆகியோர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.


இதன் தாபக உறுப்பினர்களாக 1990 ஆம் ஆண்டு முதல் 35 ஆண்டுகளாக அல் ஹாஜ் எம். அஹ்மத் நிஸார் (காரா டிரவல்ஸ்), அல் ஹாஜ் எம். ஓ.எப். ஜஸீம் (இக்ரா டிரவல்ஸ்) மற்றும் அல் ஹாஜ் எம். அப்துல் காதர் (இக்ரா டிரவல்ஸ்) ஆகியோர் இருந்துவருவதுடன்,  புதிய நிர்வாகத்தின் சட்ட அலோசகராக அல் ஹாஜ் சட்டத்தரணி எம். ஜிப்ரி அவர்கள் செயற்படுவார்கள்.


ஹஜ் டுவர் ஒப்பரேஷன் கமிட்டியின் கடந்த நிர்வாகத்தின் தலைவராக அல் ஹாஜ் ஹிஸாம் கௌஸ் (அமானத் டிரவல்ஸ்) அவர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


தகவல் :

அல் ஹாஜ் எம்.எஸ்.எஸ். சமூன்

பொதுச் செயலாளர்,

ஹஜ் டுவர் ஒப்பரேஷன் கமிட்டி




No comments

Powered by Blogger.