நௌபர் மௌலவி சிரித்துக்கொண்டு இருப்பார்
சிங்கள தலைவர் ஒருவரைத் தெரிவுசெய்வதற்கு தற்கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக நாடாளுமன்றில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்களத் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு முஸ்லிம் பயங்கரவாதிகள் 9 பேரும் கர்ப்பிணித்தாய் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார் என்பதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு முட்டாள்களா நம் நாட்டில் இருக்கின்றார்கள் என்று தான் என்னால் கேட்க முடியும்.
இந்த தாக்குதலுக்கு நல்லாட்சி பொறுப்பு கூற வேண்டும் என்ற உறுதியில்தான் அன்றும் இன்றும் இருக்கின்றோம்.
மேலும் இந்த தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி சிறையில் சிரித்துக்கொண்டு இருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment