Header Ads



மத்ரஸா மாணவர்களுக்கு முன் கருணாகரன்


கையில் சோற்று பாத்திரத்துடன் நிற்பவர் பெயர் கருணாகரன்.


மூவாற்றுப்புழை சென்டிரல் ஜும்ஆ மசூதி அருகில் நீண்ட காலமாக வசிப்பவர்.

இன்று -03-09-2023- கருணாகரன் மகனுக்கு திருமணம் நடைபெற்றது.

காலையில் திருமணம் முடிந்து முதல் பந்தி சாப்பாடு அருகில் உள்ள முனவ்வருல் இஸ்லாம் அரபி மதரஸாவில் பயிலும் 200 மாணவர்களுக்கு அவரும் அவரது மனைவி சைலஜாவும் தங்கள் கையாலேயே பரிமாறினர்.


கேட்டரிங் பணியாளர்கள் இருந்தும் மதரஸா குழந்தைகளுக்கு முதல் பந்தியில் அமர்ந்து சாப்பிட கருணாகரன் ஏற்பாடு செய்திருந்ததை அவரது உறவினர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.

ஜமாஅத் நிர்வாகிகள், மதரஸா உஸ்தாதுமார்களும் திருமண நிகழ்வில் கலந்து வாழ்த்தினர்.

கடந்த ஆண்டு இதே போல தனது மகளின் திருமணத்தின போதும் மதரஸா மாணவர்களுக்கு உணவு வழங்கியதும், கருணாகரன் இல்லத்தில் நடைபெறும் எந்த விஷேஷமானாலும் ஜமாஅத் நிர்வாகிகள் இமாம்களையும் அழைத்து அவர்களிடம் பிரார்த்தனை செய்ய கூறுவதும் வாடிக்கை..

Colachel Azheem

No comments

Powered by Blogger.