Header Ads



பின் கதவால் வெளியேறினாரா ரணில்..? உருத்திரகுமாரனின் தலைமையில் தமிழர்கள் போராட்டம்


நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பதை எதிர்க்கும் விதமாக ஐ.நா முன்றலில் பெரும் திரளான தமிழ் மக்கள் தமிழீழத் தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த போராட்டமானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனின் தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.


"தியாகி திலீபனின் ஊர்தியை சிங்கக் கொடி கொண்டு அடித்து நொருக்கிய சிங்கள பெளத்த இனவெறி அரசு ரணில் அரசு, ரணிலே வெளியேறு"


"காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே?"


"சிங்களதேசமே இனப்படு கொலை செய்தது"


"ரணில் ஐ.நாவுக்கு வருவது ஐ.நாவுக்கு அவமானம்"


"இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து" போன்ற கோசங்கள் மக்களால் எழுப்பட்டன.

இதற்கு தலைமை தாங்கிய உருத்திரகுமாரன் பேசுகையில், நிரந்தர அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பின் முக்கியத்துவத்தையும் கூறியது மட்டுமல்ல இலங்கையின் உண்மைக்கும், நீதிக்குமான ஆணைக்குழு தமிழர்களை ஏமாற்றுவதற்கான சதித்திட்டமே என்று கூறினார்.


மேலும் பெளத்த மயமாக்கல் , சிங்களக் குடியேற்றம் ஆகியவற்றில் ஐ. நா தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


பெருந்திரளான தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் காரணமாக ரணில் பின் கதவால் ஐ.நாவை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.