Header Ads



எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீள்பரிசீலனை செய்யுங்கள் - மைத்திரிபால கோரிக்கை


செனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் மூலம் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது சட்டத்தரணி ஊடாக உயர்நீதிமன்றத்திடம் நேற்று -16- கோரிக்கை விடுத்துள்ளார்.


ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று(15) மீள விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் மன்றில் முன்னிலையான பைசர் முஸ்தபா இந்த கோரிக்கையை முன்வைத்தார்.


குறித்த மனுக்கள் புவனேக அலுவிஹாரே, முர்து பெர்னாண்டோ, எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி நவாஸ், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.


இதேவேளை, வழக்கு விசாரணையின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை காரியாலயத்திற்கு அடுத்த வாரம் சென்று ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மனு ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.