மசாஜ் செய்யும்போது சுகயீனமடைந்து உயிரிழந்த நபர்
நீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் நேற்று (04) இரவு மசாஜ் செய்யும்போது சுகயீனமடைந்து அவசர அம்பியூலன்ஸ் மூலம் நள்ளிரவு 12 மணியளவில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
Post a Comment