Header Ads



மோடியின் முஸ்லிம் விரோதம் போன்று, ராஜபக்சக்களும் முஸ்லிம் விரோதத்தை பின்பற்றி ஆட்சியை தக்கவைக்க முயற்சித்தனர்


மோடியின் மத எதிர்ப்பு கொள்கையை பின்பற்றி ராஜபக்சக்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தனர் என மக்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் ஹெஸான் மாலக்க தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறுகையில்,


நாம் மிகவும் தெளிவாக கூறுகின்றோம். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் போன்றவர்களுடன் ராஜபக்சக்கள் பழகினார்.


அவ்வாறு இல்லையென்றால் சிவசேனா இயக்கத்தை ஆரம்பித்த சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள் ராஜபக்சக்களின் நெருக்கமானவர்களாக காணப்படுகின்றனர். பிஜேபி அல்லது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நடைமுறைகளையே பின்பற்றினர்.


அஜித் தோவாலின் ஆலோசனைக்கு அமையவே இந்தியாவில் முஸ்லிம் விரோத கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன் ஊடாகவே மோடி தனது ஆட்சியை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டார்.


உலாமா தாக்குதலுக்கு புண்ணியம் சேரவே மோடி 2019 ஆம் ஆண்டு தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டார்.


எனவே ராஜபக்சகளின் அண்ணாவாக மோடியின் அனுபவங்களையே இவர்கள் பெற்றுக் கொண்டனர்.


இலங்கையில் இரத்தத்தின் மத்தியில் ஆட்சி நடத்தும் அணுகு முறையை மோடியிடமிருந்து ராஜபக்சக்கள் கற்றுக் கொண்டனர்.

No comments

Powered by Blogger.