சுகாதார அமைச்சரை காப்பாற்றாதீர்கள்
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்து அவரை பாதுகாக்க வேண்டாம் என SLPP குழு வலியுறுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு அன்றையதினம் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என SLPP தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எச்சரித்துள்ளார்.
பொது சுகாதாரத் துறையின் சீரழிவைத் தடுக்க அமைச்சர் ரம்புக்வெல்ல தவறியதற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தது. கடந்த பொதுத் தேர்தலில் SJB 54 இடங்களை வென்ற போதும் நான்கு பேர் அரசாங்க தரப்பிற்கு தாவியுள்ளனர்
எனவே SLPP பாராளுமன்றக் குழுவின் ஆதரவின்றி பிரேரணையை நிறைவேற்ற முடியாது என்றும் பீரிஸ் கூறியுள்ளார்.
Post a Comment