உலகின் முதல் ஹிஜாப் சிலை - அதன் வடிவமைப்பாளர் கூறியுள்ள விளக்கம்
- Rosy S Nasrath -
இங்கிலாந்து ,மேற்கு மிட்லண்ட்ஸின் ,ஸ்மெத்விக் நகரில் அடுத்த மாதம் திறப்புவிழா காணவிருக்கும் உலகின் முதல் ஹிஜாப் அணிந்த சிலையை உருவாக்கி அதனை பொதுவெளிக்கு கொண்டுவர உதவிய சிலையின் வடிவமைப்பாளர் லியூக் பெரி கூறுகையில்.
இந்த பகுதியில் இன்னாரும் வாழ்ந்தார்கள் என்பதன் அடையாளத்திற்காக அனைத்து தரப்பு மக்களிடமும் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற ஹிஜாப் சிலையை முதலில் இங்கே வைக்க விரும்பினேன் என கூறுகிறார்.
ஹிஜாப் அணியும் பெண்களை கொண்டாடுவதற்காக செதுக்கப்பட்ட இச்சிலை, உலகின் முதல் ஹிஜாப் சிலை ஆகும். 16 அடி உயரமும் ஒரு டன் எடையும் கொண்டது. இச்சிலையின் அடியில் செதுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்புமிகு வாசகம்.
"தான் விரும்பும் உடையை அணியும் உரிமையும் அதற்கான மதிப்பும் ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்பட வேண்டும்:
அவளது உண்மையான வலிமை அவளது மனதிலும் சிந்தனையிலும் தான் உள்ளது".
ஹிஜாப் நம் கலாச்சார உடையா? அது நமக்குத் தேவையா? என்பதனைத்தையும் விட அதை விரும்பி அணியும் மக்களும் நம்மோடு வாழ்கிறார்கள், அவர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து மரியாதையுடன் நடத்துவது என்பதே மனித லட்சணங்குறிய குணம் - என்பதாக இதன் கான்ஸப்ட். At least அவர் ஒரு முயற்சியாவது எடுத்துள்ளார்.
மேற்கு நாட்டவர்கள் மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். இது பற்றி நாம் பெருமைப்பட வேணடும். சிலை செய்வதற்கும் அதற்கு ஆதரளிப்பதும் எமது கலாசாரமல்ல என நாம் நம்பி செயற்பட்ட போதிலும் மேற்கு நாடுகளின் இது போன்ற மனித நேயத்தை நாம் மனதார வரவேற்கின்றோம்.
ReplyDelete