Header Ads



முதலிடம் பெற்ற மாணவி


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) 


வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில், கலைப்பிரிவில் ராஜலக்சனா என்ற மாணவி மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.


அகில இலங்கை ரீதியில் கலைப்பிரிவில் 83ஆவது இடத்தினையும் இந்த மாணவி பெற்றுக் கொண்டுள்ளார்.


மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை இ.கி.மி.வித்தியாலயத்தில் இந்த மாணவி பயின்றதுடன்,  மாணவியின் பெறுபேறு தொடர்பில் பாடசாலை சமூகம் பெருமை கொள்வதுடன், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

1 comment:

  1. ராஜலக்சனா மாணவியின் எதிர்காலம் ஔிமயமானதாக அமைய எமது இதயங் கனிந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.