கால்வாயில் பாய்ந்த, உழவு இயந்திரம்
வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் கால்வாயில் பாய்ந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை பகுதியில் இன்றைய தினம் (03) இரவு 7.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முரசுமோட்டையில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக உழவு இயந்திரத்தில் பயணித்த பொழுது வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் அருகில் இருந்த கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-கிளிநொச்சி நிருபர் சப்தன்-
Post a Comment