Header Ads



யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி, பழைய மாணவர் மாபெரும் ஒன்றுகூடல்


யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின்  பழைய மாணவர்களுடனான மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று எதிர்வரும் 2023.09.28,29 மற்றும் 2023.09.30ஆம் திகதிகளில் எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. 

மேற்படி பழைய மாணவர் ஒன்றுகூடல்  தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் (17.09.2023) ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்றது. 


அதற்கான பழைய மாணவர்கள் கொண்ட ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டது. அதிபரை தலைவராக கொண்டு இக்குழு இயங்க முடிவாகியது. எதிர்வரும் 2023.09.28,29 மற்றும் 30ஆம் திகதி மூன்று நாட்கள்  நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இடம் - பாடசாலை வளாகம் (ஒஸ்மானியாக் கல்லூரி) 


முதலாம் நாள் நிகழ்வுகள் – 2023.09.28 (வியாழன்)


பி .ப 4.00 மணிக்கு பழைய மாணவர்கள் வரவேற்பு 

பி .ப 5.00 மணிக்கு சிற்றூண்டி பரிமாறல்

பி . ப 5.15 மணி தொடர்க்கம் 8.00 மணி வரை பழைய   மாணவர்களின் ஆண்டு ரீதியான 10 நிமிட நிகழ்ச்சிகள்

இரவு 8.00 மணி தொடர்க்கம் 9.00மணிவரை அதிபர் மற்றும் பழைய மாணவர்களுக்கான கலந்துரையாடல் 


இரண்டாம் நாள் நிகழ்வுகள் - 2023.09.29 (வெள்ளி)


காலை 9.00மணி தொடர்க்கம் 12.00மணிவரை சினேகபூர்வ கிரிக்கட் விளையாட்டு

மதியம் 2.00 மணி தொடர்க்கம் 6.00 மணிவரை சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி

6.05 மணிக்கு பரிசளிப்பு விழா

மூன்றாம் நாள் நிகழ்வுகள்-

2023 09 30 (சனி)


காலை 6.00மணி தொடர்க்கம் 7.00 மணிவரை சைக்கிள் ஓட்டப்போட்டி 

காலை 7.00மணி தொடர்க்கம் 8.00மணிவரை மரதன் ஓட்டம்

மதியம் 1.00மணிக்கு பழைய மாணவர்களுக்கு மதிய போசனம்

பி.ப 2.00மணியுடன் நிகழ்ச்சி நிறைவு


நன்றி

வஸ்ஸலாம் 


தகவல்

அதிபர்,

தலைவர் - பழைய மாணவர் ஒன்றுகூடல் ஏற்பாட்டுக்குழு

ஒஸ்மானியாக் கல்லூரி 

யாழ்ப்பாணம். 

Contact :- 0717066338

2023.09.19

No comments

Powered by Blogger.