கந்தளாயில் நிகழ்ந்த கொடூரமான சம்பவம்
திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் இரவு தபால் ரயிலில் இருந்து தந்தை மகளை தள்ளிவிட்டு , தந்தையும் ரயிலிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்றிரவு கந்தளாய் புகையிர நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இருவரின் சடலமும் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment