Header Ads



ஈஸ்டர் தாக்குதல் குறித்து, புதிய தகவல்கள் கிடைத்துள்ளன


2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை தாமதமாக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை கர்தினால் மல்கம் ரஞ்சித் மீண்டும் சாடியுள்ளார்.


பயங்கரவாத குழுவினர் ஈவிரக்கமற்ற தாக்குதல்களை மேற்கொள்வதற்கான அனைத்து ஆதரவையும் வழங்கிய குழுவொன்றுள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன  என கர்தினால் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெறாத சில விடயங்கள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அபுஹிந் என்ற நபரோ குழுவோ இருப்பதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன என கர்தினால் தெரிவித்துள்ளார்.


இந்த ஆதாரம் வெளியானவேளை ஐந்து நீதிபதிகளில் ஒருவர் இந்த பெயர் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்,ஊடகங்கள் இருப்பதால் தன்னால் விபரங்களை வெளியிட முடியாது என குறிப்பிட்டுள்ள சாட்சி எழுத்தில் அது குறித்த விடயங்களை வழங்கியுள்ளார் என கர்தினால் தெரிவித்துள்ளார்.


(வீரகேசரி)

No comments

Powered by Blogger.