Header Ads



பேஸ்புக், கூகுள், இன்ஸ்டாகிராமை இலங்கையை விட்டு விரட்டும் கொடூரமான சட்டம்


நேற்றிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலம், பேஸ்புக், கூகுள் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இலங்கையை விட்டு விரட்டும் கொடூரமான சட்டமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


“இந்த வர்த்தமானியின் பிரகாரம் எது உண்மை எது உண்மையல்ல என்பதை தீர்மானிக்க ஜனாதிபதி, ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும். இது பேச்சு சுதந்திரம் மற்றும் சிந்தனை சுதந்திரத்தை மீறுகிறது. இந்தச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் நீங்கள் ஒருபோதும் அந்நிய முதலீட்டாளர்களைப் பெற மாட்டீர்கள், ”என்று அவர் கூறினார்.


அத்துடன் , கூகுள், பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் இந்த சட்டத்தை வரவேற்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா? என ஹர்ஷ டி. சில்வா சபையில் கேள்வி எழுப்பினார்.

No comments

Powered by Blogger.