அல்லாஹுக்காகவே தான் குடும்பத்தோடு தாக்குதலை மேற்கொள்வதாக, சஹ்ரான் கூறியபின்னர் வேறு என்ன கதைக்க உள்ளது..?
செனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் பாராளுமன்றில் இதனை கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,
அல்லாஹுக்காகவே தான் குடும்பத்தோடு குண்டுதாக்குதலை மேற்கொள்வதாக சஹ்ரான் தாக்குதலுக்கு முன் வெளியிட்ட வீடியோவில் தெளிவாக கூறியுள்ளான்.
தனது இறைவனுக்காகவே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தாக்குதல் மேற்கொண்ட நபர் குறிப்பிட்ட பின்னர், வேறு என்ன கதைக்க உள்ளது.
இந்த தாக்குதல் தனது மத நப்பிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று பௌத்த தலைவரை நாட்டின் தலைவராக்க இந்த தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை.
2017 இல் சில முஸ்லிம் குடும்பங்கள் ஐ எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றதாக அப்போதய நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூறியபோது முஜிபுர் ரஹ்மான் போன்ற முஸ்லிம் தலைவர்கள் அதனை மறுத்தார்கள். விசாரணைகளுக்கு இடையூராக இருந்தார்கள் அதன் விளைவாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றது என அவர் கூறினார்.
Post a Comment