Header Ads



மற்றுமொரு பல்கலைக்கழக மாணவனின், வாழ்க்கை பற்றிய தவறான தீர்மானம்


மட்டக்களப்பு - வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


குறித்த மாணவன் கொழும்பு - ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்ற முதலாம் ஆண்டு மாணவராவர்.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காணாமல் போயுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவலான செய்தி வெளியாகியிருந்தது.


இந்த விடயம் தொடர்பில்  மேலும் தெரியவருகையில்,


சம்பத்தினமான கடந்த 31.08.2023 அன்று குறித்த மாணவன் காணாமல் போன நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொலைபேசி மூலம் அவரை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர்.


எனினும் அவரது தொலைபேசி செயற்பட்டதாகவும் எவ்வித மறு அழைப்பும் உறவினருக்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்த விடயம் தொடர்பில் சந்தேகமடைந்த  உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிரித்துள்ளனர்.


இதன்பின்னர் விசாரணையின் ஓர் அங்கமாக மாணவன் சென்ற இடங்கள் தொடர்பான சிசிரீவி காணொளியை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்.


இதற்கமைய குறித்த மாணவன், கொழும்பில் உள்ள தனியார் விடுதியொன்றின் அறையை முன்பதிவுசெய்துள்ளமை தெரியவந்துள்ளது.


இவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும், உயிரிழந்த மாணவனின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்த மாணவன் கல்குடா வலயத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று, கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.