Header Ads



பள்ளிவாசல்கள் பற்றி விழிப்புடன் செயற்பட வேண்டும், யாழ்ப்பாண முஸ்லிம்களை நாங்கள் கொல்லவில்லை


இறுதி யுத்த காலத்தின் போது முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்பிற்காகவே வெளியேற்றப்பட்டனர். மாறாக அவர்கள் படுகொலை செய்யப்படவில்லை என முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.


முஸ்லிம்கள் என்பவர்கள் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ்ந்தவர்கள்.சிங்கள அரசுடன் போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது முஸ்லிம்களும் தமிழர்கள் என்ற எண்ணத்தில் பாதுகாப்பிற்காகவே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.


இறுதி யுத்த காலத்தின் போது குறித்த பகுதியில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த முஸ்லிம் தளபதியொருவர் செயற்பட்டு வந்ததாகவும், அவரின் ஆலோசனைக்கமையவே போர் தீவிரமடைந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், முஸ்லிம் மக்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. வாக்கு வங்கிகளுக்காக அரசியல்வாதிகள் பிரிவினையை கையாள்வதாகவும் கூறியுள்ளார்.


இருப்பினும், இலங்கை இராணுவங்கள் நுழைய முடியாதளவு கிழக்கில் பள்ளிவாசல்கள் உள்ளன. இவை தொடர்பில் விளிப்புடன் செற்படுமாறும் கூறியுள்ளார்.


ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.