Header Ads



நலமாக உள்ளார் மகிந்த


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நலமுடன் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


மகிந்த சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் மகிந்த ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரின் இறுதிச் சடங்கில் மகிந்த கலந்து கொள்ளவில்லை.


இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சுகவீனம் காரணமாக கலந்து கொள்ளவில்லை என சமூகவலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டுள்ளது.


வதந்திகளை பொய்யாக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று பாமன்கடை ஸ்ரீ மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.


பாமன்கடை ஸ்ரீ மகா விகாரையின் தலைவர் வல்பொல பியானந்த தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க மகிந்தவின் தலைமையில் மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஆம் இவர் நலமாகவே இருப்பார், ஏனெனில் அவருடைய வயதில் இன்னும் 900 வருடம் அப்படியே இருக்கின்றது. நாட்டின் பொதுமக்களின் சொத்துக்களைக் களவாடி ஏனைய நாடுகளில் பதுக்கிவைத்தவை இப்போது தான் பலன்கொடுக்க தொடங்கியுள்ளது. அவற்றின் இலாபமாக வரும் கோடான கோடி டொலர்களுக்கு என்ன செய்வது என்ற திட்டம் இன்னும் அவரிடத்தில் இல்லை. எனவே வயதும் இன்னமும் 900 வருடங்கள் அப்படியே இருப்பதனால் மெதுவாக, நிதானமாக அவை பற்றி திட்டமிடுவார். எனவே இன்னும் பல நூறு வருடங்களுக்கு சுகமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்.

    ReplyDelete

Powered by Blogger.